இந்த படத்தின் இரண்டாம் பாகம் கைகூடவில்லை: வருத்தம் தெரிவித்த ஷியாம்..!

இந்த படத்தின் இரண்டாம் பாகம் கைகூடவில்லை: வருத்தம் தெரிவித்த ஷியாம்..!

ஷியாம், அருண்விஜய் நடிப்பில் வெளியான படம் இயற்கை. இப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.பி.ஜனநாதன். இதைத்தொடர்ந்து இவர் ஈ, பேராண்மை, புறம்போக்கு என்கிற பொதுவுடைமை என பல்வேறு புரட்சிகரமான கருத்துக்களை கொண்ட திரைப்படங்களை இயக்கியிருந்தார்.

அடுத்ததாக விஜய் சேதுபதியை வைத்து லாபம் படத்தை இயக்கி முடித்த எஸ்.பி.ஜனநாதன், இறுதிக்கட்ட பணியில் ஈடுபட்டிருந்த போது உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். 

இந்நிலையில் மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் பிறந்தநாளான இன்று, நடிகர் ஷியாம் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன், இயற்கை படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் அப்படத்தை நார்வே அல்லது பிஜி நாட்டில் படமாக்க அவர் தன்னிடம் ஆலோசித்து வந்ததாகவும் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். எஸ்.பி.ஜனநாதனின் மறைவால் அப்படம் கைகூடாமல் போய்விட்டதாக ஷியாம் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்