கொரோனா நோயாளிகள் 13 பேர் பலி: ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?

கொரோனா நோயாளிகள் 13 பேர் பலி:  ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமா?

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகள் 13 பேர் நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரை தினந்தோறும் 1,500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று இரவு ஆக்ஸிஜன் பற்றாக் குறை ஏற்பட்டதாகவும், உடனடியாக மருத்துவமனை அலுவலர்கள் தகவல் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. பற்றாக்குறை காரணமாக, ஆக்சிஜன் அளவு குறைவாக கொடுத்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 13 கொரோனா நோயாளிகள் நள்ளிரவில் அடுத்தடுத்து பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து உயிரிழந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் கூறுகையில், "நோயாளிகளுக்கு விநியோகிக்கப்படும் ஆக்சிஜன் அளவில் சரியான முறையில் விநியோகம் செய்யப்படாததால் இந்த உயிரிழப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆக்சிஜன் போதிய அளவு உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.66%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.34%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்