கொரோனா எதிரொலி: ஒடிசாவில் இன்று முதல் ஊரடங்கு அமல்!

கொரோனா எதிரொலி: ஒடிசாவில் இன்று முதல் ஊரடங்கு அமல்!

கொரோனாவின்  ஆட்டம் நாளுக்கு அதிகரித்து வருவதால் ஒடிசாவில் இன்று முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்கிறது.இதனால் ஒரிசாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தெரிவித்திருந்தார். 

மேலும், பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.இந்நிலையில், இன்று முதல் மாநிலம் முழுவதும் ஊரடங்கு அமலுக்கு வந்தது. ஊரடங்கானது இன்று முதல் வருகிற 19ம் தேதி வரை 2 வாரங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் கடும் கட்டுப்பாடுகளுடன் வார நாட்களில் ஒருசில போக்குவரத்துக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள் திறக்க மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்