கொரோனாவை விரட்ட பிரபல நடிகையின் அட்வைஸ்?

கொரோனாவை விரட்ட  பிரபல நடிகையின் அட்வைஸ்?

கொரோனா பரவும் இந்த கொடுமையான சூழலில் ஒருவருக்கு ஒருவர் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும் என்று நடிகை அனுஷ்கா கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகை அனுஷ்கா தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தற்போதைய சூழலில் ஒவ்வொரு நடிகை நடிகர்களும்,சினிமா பிரபலங்களும் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். 

கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் அதிவேகமாக பரவி வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், பல்வேறு திரையுலக பிரபலங்கள் தங்களுடைய சமூக வலைதளம் மூலமாக கொரோனா தொடர்பான உதவிகளைப் பகிர்ந்து வருகிறார்கள். அந்த வகையில், நடிகை அனுஷ்கா, கொரோனாவை எதிர்கொள்ள சில அறிவுரைகளை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: இந்த இக்கட்டான சமயத்தில் ஒருவருக்கு ஒருவர் முடிந்த உதவிகளை செய்ய வேண்டும். வழிகாட்டு முறைகளை தயவு செய்து கடைபிடியுங்கள். வீட்டிலேயே இருங்கள். சுய ஊரடங்கை கடைபிடிப்போம். சில மூச்சு பயிற்சிகளை செய்யுங்கள். ஒவ்வொரு நாளையும் பாசிட்டிவ்  எண்ணத்துடன் அணுகுங்கள். எந்த நிலையிலும் சோர்ந்து விடாதீர்கள். நெகடிவ் எண்ணங்களை வர விடாதீர்கள். நாம் ஒன்றாக இணைந்து மனித குலத்தின்  பலத்தை காட்ட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்