கண்ணீருடன் ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய் தேவரகொண்டா.!

கண்ணீருடன் ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்றிய விஜய் தேவரகொண்டா.!

விஜய் தேவரகொண்டாவின் தீவிர ரசிகர் ஹேம்நாத். இவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தனது கடைசி நாட்களை எண்ணிக் கொண்டு இருக்கிறார். அத்துடன் இவருக்கு கொரோனா பாதிப்பும் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவின் தீவிர ரசிகரான இவருக்கு விஜய் தேவரகொண்டாவுடன் பேசவேண்டும் என்பதே தனது கடைசி ஆசையாம். அதனை அவர் சமூக வலைதளத்திலும் வெளிப்படுத்தி இருந்தார்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த விஜய் தேவரகொண்டா, தனது ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்ற முடிவு செய்தார். இதனை தொடர்ந்து ரசிகர் மன்ற நிர்வாகிகள் மூலமாக அந்த ரசிகர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அவருடன் வீடியோ காலில் பேசினார். 

அவர் பேசும்போது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் விஜய் தேவரகொண்டா கண்ணீர் விட்டார். மேலும் அவர் கூறும்போது, “உன்னோடு பேசியதும் உன் முகத்தில் சிரிப்பை பார்த்ததும் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சியை கொடுக்கிறது. உன்னை ரொம்பவே மிஸ் பண்ணுவேன் ஹேம்நாத்” என கூறியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.66%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.34%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்