கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா : நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று.!

கோரத் தாண்டவம் ஆடும் கொரோனா : நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று.!

பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரல் இறுதியில் இருந்து ஒருநாளுக்கு 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுகிறது. 

இந்நிலையில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு மாதமாக தனது பெற்றோர் வீட்டில் இருந்து வருகிறார் தீபிகா படுகோன். இந்நிலையில் அவர் தந்தையான முன்னாள் பேட்மிண்டன் வீரர் பிரகாஷ் படுகோனுக்கு தொற்று ஏற்பட்டு கடந்த வாரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

இதையடுத்து தீபிகாவின் தாய் உஜ்ஜால மற்றும் தங்கை அனிஷாவுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது இவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தீபிகா படுகோனுக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

ஆனால் இதுகுறித்து தீபிகாவோ அவரது ரன்வீரோ எந்தவித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்