கொரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகையின் சகோதரர்..!

கொரோனாவால் உயிரிழந்த பிரபல நடிகையின் சகோதரர்..!

கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பெட் கிடைக்காததால் நடிகை பியாவின் சகோதரரை உயிரிழந்துள்ளார்.

இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கிய 'பொய் சொல்ல போறோம்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை பியா பாஜ்பாய், அஜித்தின் 'ஏகன்', வெங்கட் பிரபுவின் 'கோவா' மற்றும் மறைந்த கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஜீவா நடித்த 'கோ' என பிளாக்பஸ்டர் வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில் நடிகர் டோவினோ தாமஸுக்கு ஜோடியாக 'அபியும் அனுவும்' என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், COVID-19 தொற்றால் பாதிக்கப்பட்ட தன்னுடைய  சகோதரர் மிகவும் கவலைக்கிடமான இருப்பதாக பியா பாஜ்பாஜ் சமூக ஊடகங்களில் உதவி கேட்டார்.

அதில், "எனக்கு உத்திர பிரதேசம், ஃபாருகாபாத், கயம்கஞ்ச் பிளாக்கில் அவசர உதவி தேவை. ஒரு படுக்கையுடன் கூடிய வென்டிலேட்டர் வேண்டும், என் சகோதரர் இறந்து கொண்டிருக்கிறார்.. தயவு செய்து உதவி செய்யவும். நாங்கள் ஏற்கனவே குழப்பத்தில் இருக்கிறோம்" என ட்வீட் செய்திருந்தார்.

அந்த பதிவுக்குப் பிறகு 2 மணி நேரம் கழித்து தனது சகோதரர் உயிருடன் இல்லை என்பதை பகிர்ந்துக் கொண்டார் பியா.அவர் 30-களின் தொடக்கத்தில் இருப்பதாக தெரிகிறது. 

இந்த சோகமான செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதுடன், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை எவ்வளவு கண்மூடித்தனமாக வாழ்க்கையை பறிக்கிறது என்பதையும் கண்முன் காட்டியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்