மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரியங்கா தேஷ்பாண்டே… !

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரியங்கா தேஷ்பாண்டே… !

பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தான் மருத்துவமனையில் இருக்கும் வீடியோ ஒன்றை தனது யூ-ட்யூப் சேனலில் வெளியிட்ட வீடியோ தற்போது யூ-ட்யூபில் ட்ரெண்டாகி வருகிறது. 

முன்னணி தொகுப்பாளராக வலம் வருபவர் வி.ஜே.பிரியங்கா. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அவர், தனக்கான தனி இடத்தைப் பிடித்துள்ளார். ஜோடி, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூஸிக் என பிரியங்கா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் ஏராளம். முக்கியமாக நிகழ்ச்சியில் தன்னை யார் என்ன சொன்னாலும் அதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக் கொள்வார்.

டிவி மட்டுமல்லாமல் தனக்கென யூ-ட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதனை தற்போது வரை 1.16 மில்லியன் பார்வையாளர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். 

இந்நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த மாதம் 12-ம் தேதி பிரியங்காவுக்கு வயிறு கோளாறு ஏற்பட, சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு எடுத்த வீடியோவை தான் தனது சேனலில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், ”என்ன கருமத்த சாப்பிட்டேனு தெரியல. பேதி ரெண்டு மூனு தரவ இல்ல, 15 தடவைக்கு மேல போய்ட்டு இருக்கு. ஆஸ்பத்திரில ஊசி, குளுக்கோஸ்னு அடிச்சு நவத்தீட்டு இருக்காங்க. எவ்வளவு ஊசிப் போட்ருக்காங்கனு நீங்களே பாருங்கனு” என கூறியுள்ளார்.

மேலும் அவர், ‘ அவன் அவன் செய்ற தப்புக்கு  அவன் அவன் தான் தண்டனை அனுபவிக்கணும். நான் பண்ணதுக்கு தான் இப்போ அனுபவிக்கிறேன். சாப்பிடுறது தப்புங்களா? தப்பில்ல.. ஆனா என்ன சாப்பிடுறோம், அத எங்க சாப்பிடுறோம்ங்கறது தான் முக்கியம்” என்கிறார்.

பின்னர் இறுதியாக தான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு செல்வதையும் அந்த வீடியோவில் பதிவு செய்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது யூ-ட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்