தனுஷ் படத்தின் புதிய சாதனை: இதுவே முதல் முறை..!

தனுஷ் படத்தின் புதிய சாதனை: இதுவே முதல் முறை..!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷின் திறமையான நடிப்பால் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. தனுஷூடன் இணைந்து இந்தப் படத்தில், பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூன் மாதம் 18-ந் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

தமிழில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தை தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 17 மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை பல தமிழ் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியானாலும், அவை அதிக மொழிகளில் டப் செய்யப்படவில்லை. 

ஓடிடியில் வெளியாகும் தமிழ் படம் ஒன்று 17 மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாவது இதுவே முதல்முறை ஆகும்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்