ஏழைக் குழந்தைகளின் உணவு மற்றும் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிரபல தமிழ் நடிகர்..!

ஏழைக் குழந்தைகளின் உணவு மற்றும் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிரபல தமிழ் நடிகர்..!

கொரோனா தொற்றின் இரண்டாவது அலஒ நாடு முழுவதும் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. உயிரிழப்பும் பாதிப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருப்பதால் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

கடந்த ஏப்ரல் இறுதி முதல் இந்தியாவில் நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுவதோடு நேற்று ஒரு நாள் மட்டும் 3417 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உதவ தமிழில் 'மாநகரம்' 'மாயவன்' உள்ளிட்ட படங்களில் நடிகர் சந்தீப் கிஷன் முன்வந்துள்ளார்.

இந்தநிலையில் இது குறித்து பதிவிட்ட அவர், ” இந்த சவாலான காலகட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக கொரோனா தொற்றுக்கு தங்கள் பெற்றோரை இழந்த குழந்தைகள் யாரேனும் உங்களுக்கு தெரிந்தால், அவர்களைப் பற்றி கீழ்கண்ட இ மெயில் முகவரியில் தெரியப்படுத்துங்கள்.

நானும் என்னுடைய குழுவினரும் எங்களின் சக்திக்கு உட்பட்ட வகையில் அது போன்ற குழந்தைகளின் அடுத்த இரண்டு ஆண்டுக்காக உணவு மற்றும் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்கிறோம். இது சோதனைக் காலம். இதில் மனிதர்களாக ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருப்பதே முக்கியம் “ என்று முகவரியை பதிவிட்டுள்ளார்.

கீழ்கண்ட முகவரிக்கு தகவல்களை அனுப்பவும்:

[email protected]

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்