தமிழில் நயன் தெலுங்கில் நான்: சம்பளத்தை உயர்த்திய தளபதி பட நடிகை..!

தமிழில் நயன் தெலுங்கில் நான்: சம்பளத்தை உயர்த்திய தளபதி பட நடிகை..!

தமிழில் ஜீவாவுக்கு ஜோடியாக முகமூடி படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே யார் இந்த நடிகை என்று ரசிகர்களால் அடையாளம் காணப்பட்டார் நடிகை பூஜா ஹெக்டே. முகமூடி படத்திற்கு நடிகை பூஜா ரூ.30 லட்சம் சம்பளம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.

ஆனால் தற்போது தென்னிந்திய மொழிகளில் மிகவும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் பூஜா ஹெக்டே. இதனால் இவரின் மார்க்கெட் திரையுலகில் உயர்ந்து காணப்படுகிறது.

தெலுங்கு, இந்தியில் நடித்த படங்கள் அனைத்து நல்ல வசூலை வாரி குவித்துள்ளன. சமீபத்தில் அல்லு அர்ஜுன் உடன் நடித்த தெலுங்கு படமும் மாபெரும் சிறந்த குடும்ப திரைப்படம் என பாராட்டப்பட்டது. 

எனவே சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி இருக்கிறாராம் பூஜா ஹெக்டே. இது நயன்தாரா வாங்கும் சம்பளத்துக்கு இணையானது என்றும் கூறப்படுகிறது. 

தெலுங்கில் மகேஷ்பாவுடன் நடித்தபோது ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய பூஜா தற்போது இந்தியில் 2 படங்கள், தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘தளபதி 65’ படம், தெலுங்கில் 2 படங்கள் என்று 5 படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த எல்லா படங்களும் வெற்றி பெறுவதால் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.66%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.34%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்