ரஜினி படத்தை இயக்குகிறார் 3K பட இயக்குநர்..?

ரஜினி படத்தை இயக்குகிறார் 3K பட இயக்குநர்..?

தமிழ் சினிமா ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் படம் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் அல்லது தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

இது குறித்து இயக்குனர் தேசிங் பெரியசாமி வெளியிட்ட பதிவில், "எனது அடுத்த திரைப்படம் குறித்து பரவி வரும் தகவல் உண்மையல்ல, இது குறித்து விரைவில் அறிவிக்கிறேன். உங்களின் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி" என பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவின் மூலம் தலைவர் 169 படத்தை தேசிங் பெரியசாமி இயக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது, இதையடுத்தி உறுதியான தகவலுக்காக ரசிகர்கள் காத்திருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.66%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.34%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்