கொரோனா நோயாளிக்காக ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பி உதவிய சோனு சூட்.!

கொரோனா நோயாளிக்காக ஆம்புலன்ஸ் விமானம் அனுப்பி உதவிய சோனு சூட்.!

உயிருக்கு போராடிய பெண் கொரோனா நோயாளியை காப்பாற்ற பாலிவுட் நடிகர் சோனு சூட், ஆம்புலன்ஸ் விமானம் ஏற்பாடு செய்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்த கைலாஷ் அகர்வால் (25)  என்ற பெண் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை மோசமானது. இதனால் உயர் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் மருத்துவமனையில் இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ட்விட்டரில் நடிகர் சோனு சூட்டிடம் நிலைமயைக் கூறி உதவி கோரியுள்ளார்.

இதையடுத்து ஐதராபாத் அப்போலோ மருத்துவமானையில் இடம் இருப்பதை அறிந்து சோனு சூட், கைலாஷ் அகர்வாலை ஜான்சியில் இருந்து ஐதராபாத்துக்கு கூட்டிச் செல்ல தன்  சொந்த செலவில் ஆம்புலன்ஸ் விமானத்தை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்