விஜே சித்ரா பிறந்தநாளில் தந்தை செய்த காரியம்… வைரலாகும் வீடியோ..!

விஜே சித்ரா பிறந்தநாளில் தந்தை செய்த காரியம்… வைரலாகும் வீடியோ..!

விஜே சித்ராவின் பிறந்தநாளான நேற்று அவரின் தந்தை செய்த ஒரு காரியம் தற்போது அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.  

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலமாக நட்சத்திரமாக ஜொலித்த சித்ரா முல்லை கதாபாத்திரமாக மக்களிடையே பிரபலமடைந்தார். ஆனால் கடந்த டிசம்பர் 9ஆம் தேதி பரிதாபமாக மரணம் அடைந்தார்.  அவருடைய மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. பின்னர் அவரை திருமணம் செய்யவிருந்த ஹேம்நாத் அவருடைய மரணத்துக்கு தூண்டுதலாக இருப்பதாக கூறப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. பின்னர் அவர் ஜாமீன் விடுதலையானார்.

இந்த நிலையில் சித்ராவின் பெற்றோர் மிகவும் உடைந்து போயினர். எப்படியோ நாட்களை கடந்துவிட்ட நிலையில் சித்ரா நடித்த கால்ஸ் திரைப்படம் வெளியாகி அவர் வெள்ளித் திரையிலும் நடித்து இருக்கிறார் என்கிற தகவல் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்நிலையில் சித்ராவின் பிறந்த நாளான மே 2-ஆம் தேதி வந்தது. அதாவது நேற்றைய தினம். இதனால் தங்களுடைய இல்லத்தில் சித்ராவின் பிறந்தநாளை வருத்தத்துடன் கொண்டாடி கேக் வெட்டிய சித்ராவின் தந்தை சித்ராவின் புகைப்படத்துக்கு கேக் ஊட்டுவது போல் கண்கலங்க தொடங்கினார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி காண்போர் அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தி இருக்கிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.55%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.45%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்