தெலுங்கு படத்தில் தளபதியா? அட்டகாசம் பண்ணும் ரசிகர்கள்..!

தெலுங்கு படத்தில் தளபதியா? அட்டகாசம் பண்ணும் ரசிகர்கள்..!

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருப்பவர்  விஜய். இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதையடுத்து நடிகர் விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்தில் நெல்சன் இயக்கத்தி நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது. இதனிடையே படத்தின் நாயகி பூஜா ஹெக்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க தாமதமாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நடிகர் விஜய் தெலுங்கு இயக்குனர் வம்சி படிபல்லி இயக்கத்தில் புதியதாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

மேலும் இயக்குனர் வம்சி  விஜய்யை சந்தித்து கதை சொன்னதாகவும், கதை விஜய்க்கு பிடித்துப்போனதால் முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்ய சொன்னதாகவும் தகவல் பரவி வருகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்