கங்கனா ரணாவத்தின் புது அவதாரம்… அதிர்ச்சியில் பாலிவுட் வட்டாரம்..!

கங்கனா ரணாவத்தின் புது அவதாரம்… அதிர்ச்சியில் பாலிவுட் வட்டாரம்..!

கங்கனா ரனாவத் நடிகையாக மட்டுமல்லாமல் அடுத்து தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.

தமிழில் மறைந்த ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் அடையாளம் காணப்பட்டவர் கங்கனா ரனாவத். ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகையான கங்கனா ரனாவத் தொடர்ந்து பரபரப்பான ட்வீட்களை அவ்வப்போது பதிவிட்டு வருவது வழக்கமான ஒன்று. ஹிந்தியில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் கங்கனா ரனாவத் ஜான்சிராணியின் வாழ்க்கையை தழுவிய மணிகர்னிகா என்கிற சரித்திர கதைகளில் நடித்து இருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருது பெற்று இருந்தார். இதனிடையே ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட தலைவி திரைப்படத்தில் கங்கனா ரணாவத் நடித்து இருக்கிறார். இந்த படத்தை ஏ.எல்.விஜய் இயக்கியிருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், கங்கனா ரனாவத் நடிகையாக மட்டுமல்லாமல் அடுத்து தயாரிப்பாளராகவும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.

தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்துக்கு தான் நடித்து வெற்றி பெற்ற மணிகர்ணிகா படத்தின் பெயரையே சூட்டி இருக்கிறார். அதாவது மணிகர்ணிகா பிலிம்ஸ் புரொடக்சன் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார் கங்கனா ரணாவத்.

மேலும் தனது தயாரிப்பு நிறுவனத் தின் கீழ் Tiku weds sheru என்கிற படத்தை முதல் படமாக தயாரிப்பதாக அறிவித்திருக்கிறார். இந்த திரைப்படம் ஒரு நகைச்சுவைப் படமாக உருவாகிறது. இந்த படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து நல்ல கதையம்சம் உள்ள படங்களை தயாரிக்கவிருப்பதாகவும், புதிய கலைஞர்களை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கங்கனா தெரிவித்து இருக்கிறார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.66%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.34%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்