தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைப்பு? காரணம் இதுதான்..!

தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைப்பு? காரணம் இதுதான்..!
தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைப்பு? காரணம் இதுதான்..!

கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து நிற்பவர் இளைய தளபதி விஜய். இவரின் திரைப்படங்களான சர்கார், பிகில், மாஸ்டர் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வந்தன.

இந்த நிலையில், தளபதி விஜய் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடந்த வந்த நிலையில், அதனை முடித்துவிட்டு தற்போது படக்குழுவினர் சென்னை திரும்பி விட்டனர்.

ஆனால்,  தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால், படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்ட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இருப்பினும் தளபதி 65 படத்தின் வெளியீட்டு தள்ளிப்போகுமோ என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com