ஆல்யா மானசா வீடியோ தான் தற்போது யூடியூபில் ட்ரெண்டிங் NO.1-ல் உள்ளது.
சின்னத்திரையில் ராஜா ராணி தொடரின் மூலம் மிகவும் பிரபலமான நட்சத்திரமாக வளர்ந்து நிற்பவர் நடிகை ஆல்யா மானசா. இவரின் இந்த கதாபாத்திரம் அனைத்து தமிழ் பெண்களின் நெஞ்சத்தை அள்ளியது.
அன்பு, அடக்கம், பொறுமை என அனைத்திலும் சிக்ஸர் அடித்திருப்பார்.மேலும் அதே தொடரில் அவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர் ராஜா ராணி சீசன் 2 சீரியலில் நடித்து வருகிறார். இருப்பினும் தற்போது தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி அதில் அவரின் குழந்தைக்கு மொட்டை அடித்துள்ளது குறித்து யூடியூப் சேனலில் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தான் தற்போது யூடியூபில் ட்ரெண்டிங் NO.1-ல் உள்ளது, இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் ஆல்யா.