அதிர்ந்து போன கீர்த்தி சுரேஷ்: ரூ.100 கோடி பட்ஜெட் படத்திற்கு வந்த சிக்கல் இதுதான்..!

அதிர்ந்து போன கீர்த்தி சுரேஷ்: ரூ.100 கோடி பட்ஜெட் படத்திற்கு வந்த சிக்கல் இதுதான்..!
அதிர்ந்து போன கீர்த்தி சுரேஷ்: ரூ.100 கோடி பட்ஜெட் படத்திற்கு வந்த சிக்கல் இதுதான்..!

கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக, கீர்த்தி சுரேஷின் ரூ.100 கோடி பட்ஜெட் படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் 4-வது குஞ்சலி மரைக்காயரின் வாழ்க்கையை மையமாக வைத்து  ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் பிரியதர்ஷன் ரூ.100 கோடி பட்ஜெட்டில் இயக்கியுள்ளார்.

இதில் கதாநாயகனாக மலையாள நடிகர் மோகன்லால் நடிக்க, கதாநாயகிகளாக கீர்த்தி சுரேஷும், மஞ்சு வாரியரும் நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இப்படத்தை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தை வருகிற மே 13-ந் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால்,  தற்போது கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருவதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால், ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் ஆகஸ்ட் 12-ந் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com