மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான கர்ணன் படத்தில் நடிகை ரஜிஷா விஜயனின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
2016ஆம் ஆண்டு வெளியான ‘அனுராக கரிக்கின் வெள்ளம்’ என்கிற மலையாள படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ரஜிஷா விஜயன். இவர் தனது முதல் படத்திலேயே சிறந்த நடிகைக்கான மாநில அரசு விருதை வென்று சாதனை படைத்தார்.
அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படத்தில் நடித்தது தமிழ் நெஞ்சங்களுக்கு பரிட்சயாமான முகமாக மாறிவிட்டது. இப்படத்தில் மண்வாசனை நடிப்பு, மண் மணக்கும் டையலாக் டெலிவரி, கொஞ்சும் தமிழ், குலைய வைக்கும் காதல் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில், நடிகை ரஜிஷா விஜயன் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகும் ‘சர்தார்’ படத்தில் நடிகர் கார்த்தி-க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தில் மற்றொரு நாயகியாக ராஷி கண்ணாவும் நடிக்க உள்ளார் .
மேலும், சர்தார் படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.