கொரோனா நிவாரணமாக ரூ.1 கோடி வழங்கிய பிரபல நடிகர்?

கொரோனா நிவாரணமாக ரூ.1 கோடி வழங்கிய பிரபல நடிகர்?
கொரோனா நிவாரணமாக ரூ.1 கோடி வழங்கிய பிரபல நடிகர்?

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாகி உள்ள நிலையில், நடிகர் அக்ஷய் குமார், ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கி இருக்கிறார்.

நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாகி உள்ள நிலையில், நடிகர் அக்ஷய் குமார், ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கி இருக்கிறார்.தமிழில் ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்த அக்ஷய் குமார், பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார். 

தற்போது நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை தீவிரமாகி உள்ள நிலையில் நடிகர் அக்ஷய் குமார், ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கி இருக்கிறார். இந்தத் தொகையை கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு அளித்துள்ளார். இதற்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், “தேவைப்படுபவர்களுக்கு உணவு, மருத்துவ உதவி, ஆக்சிஜன் வழங்க ரூ.1 கோடி நன்கொடை அளித்த அக்ஷய்குமாருக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.

கடந்த வருடம் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததும், பிரதமர் நரேந்திர மோடி கொரோனாவை எதிர்கொள்ள நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தபோது, நடிகர் அக்ஷய் குமார் ரூ.25 கோடி நன்கொடை வழங்கினார். இதுதவிர திரைப்பட தொழிலாளர்களுக்கும் அவர் பல்வேறு உதவிகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com