பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் கொரோனாவுக்கு பலி!

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் கொரோனாவுக்கு பலி!
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் கொரோனாவுக்கு பலி!

கொரோனா நோய்த்தொற்றால் இயக்குநர் தாமிரா எனும் காதர் மொஹிதின் இன்று காலை மரணமடைந்தார்.

கொரோனா நோய்த்தொற்றால் இயக்குநர் தாமிரா எனும் காதர் மொஹிதின் இன்று காலை மரணமடைந்தார். கொரோனா தொற்றுக்கு பிரபலங்கள் பலரும் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் சிலர் உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. 

 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இயக்குநர் தாமிரா அசோக் பில்லர் அருகே உள்ள மாயா மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.ஆனால் சிகிச்சை பலன் அளிக்காததால் அவர் உயிர் இழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 தமிழ் திரைப்பட இயக்குநரான தாமிரா வசனம், திரைக்கதை , கட்டுரை எழுதுவதிலும் வல்லவராக திகழ்ந்துள்ளார்.பாலச்சந்தரின் டிவி தொடர்களுக்கு வசனமும், திரைக்கதையும் எழுதிய இவர் சகாரா, அண்ணி, மனைவி போன்ற தொடர்களிலும் பெரும் பங்காற்றியுள்ளார்.

 2010 இல் இயக்குனர்கள் கே. பாலச்சந்தர், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் ரெட்டச்சுழி என்ற திரைப்படத்தினை இயக்கினார். இதையடுத்து இவர் நடிகர் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் நடிப்பில் ஆண் தேவதை படத்தினையும் இயக்கியுள்ளார்.ஆண் தேவதை படம் மூலம் இவர் நன்கு அறியப்பட்டார்.

logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com