நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரபல காமெடி நடிகரை கிண்டல் செய்து பதிவு செய்திருக்கிறார்.
நடிகை பிரியா பவானி சங்கர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிரபல காமெடி நடிகரை கிண்டல் செய்து பதிவு செய்திருக்கிறார்.
தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் ஆகிய பிரபல திரைபடங்களில் நடித்து பிரபலமானார். மேலும் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, அருண் விஜய்யின் 33-வது படம் என ஏராளமான படங்களை தன்னுடய கைவசம் வைத்துள்ளார்.
அவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை நடிகர் சதீஷ் கிண்டல் செய்து பதிவு செய்திருந்தார். தற்போது சதீஷின் புகைப்படத்தை வைத்து பிரியா பவானி சங்கர் கிண்டல் செய்து இருக்கிறார்.
சன்னிலியோனுடன் சதீஷ் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு, இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு என்று கிண்டல் செய்து பதிவு செய்திருக்கிறார்.தற்போது இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.