ஜூன் முதல் அக்டோபர் வரை நான் ஃப்ரீ: ஷங்கரின் அலப்பறை: நீதிமன்றம் அறிவுரை.

ஜூன் முதல் அக்டோபர் வரை நான் ஃப்ரீ: ஷங்கரின் அலப்பறை: நீதிமன்றம் அறிவுரை.

இந்தியன்-2 திரைப்படத்தை முடித்து கொடுக்காமல் வேறு படங்களை ஷங்கர் இயக்கக் கூடாது என உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அப்படி ஒரு உத்தரவை ஷங்கரின் விளக்கத்தை கேட்காமல் விதிக்க முடியாது என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார். இந்நிலையில், தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது லைக்கா. அந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது இயக்குனர் ஷங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ராம்சரணுடன் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ள படம் 2022ஆம் ஆண்டு மே மே மாதம் தான் தொடங்கி இருக்கிறது தற்போதைக்கு அந்த படத்தை இயக்குவதற்கு எந்தத் திட்டமும் இல்லை என்றும் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையில் தன்னுடைய தேதிகள் ஃப்ரீயாக இருப்பதால் அதற்குள் இந்தியன் 2 திரைப்படத்தினை முடித்துக் கொடுப்பதற்கு முயற்சிப்பதாகவும்" தெரிவித்துள்ளார். குறிப்பாக நடிகர் விவேக் சமீபத்தில் மரணமடைந்ததை அடுத்து அவர் நடித்திருந்த இந்தியன் 2 தொடர்பான காட்சிகளுக்கு பதில் வேறு ஒரு நடிகரை வைத்து இயக்க வேண்டிய பொறுப்பு தனக்கு இருப்பதால் அதையும் கருத்தில் கொண்டு படத்தை இயக்க வேண்டி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் இந்த பிரச்சனைக்கு நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவால் சுமுக தீர்வு காண முடியாது என்றும் இருதரப்பும் பேசி தீர்வு காணும்படி கூறி வழக்கை ஏப்ரல் 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்