மாஸ்டர் 100 வது நாள்: விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்த பிரபல இயக்குநர்!

மாஸ்டர் 100 வது நாள்: விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்த பிரபல இயக்குநர்!

’மாஸ்டர்’ படத்தின் நூறாவது நாளையொட்டி தனது பிறந்தாளை விஜய்யுடன் கொண்டாடிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இயக்குநரும் ‘மாஸ்டர்’ படத்தின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யின் ‘மாஸ்டர்’ பொங்கலையொட்டி வெளியானது. விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்த இப்படத்தில் விஜய் - விஜய் சேதுபதியின் நடிப்பு கவனம் ஈர்த்தது. அனிருத் இசையில் ‘வாத்தி கம்மிங்’ பாடல் இப்போதுவரை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரசிகர்களும் பிரபலங்களும்.

கொரோனா சூழலில் வெளியான படங்களில் வசூலைக் குவித்த படம் என்ற பெருமையும் ‘மாஸ்டர்’ படத்திற்கு இருப்பதால், நூறாவது நாளையோட்டி விஜய் ரசிகர்கள் இன்று “#100DaysOfBBMaster” என்ற ஹேஷ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். 

இந்நிலையில், இயக்குநர் ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘மாஸ்டர்’ படம் வெளியாகி 100 நாட்கள் ஆவதையொட்டி விஜய்யுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்களை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். 

”Cake வெட்டுவதை கடா வெட்டுவது போல் நினைத்து வெட்டும் முன் கும்பிட்ட தருணம். First time in my life my Birthday was made Memorable. Thank you விஜய் சார், நண்பன் லோகேஷ் கனகராஜ்” என்று ரத்னகுமார் பதிவிட்டுள்ளார்.

ரத்னகுமார் மாஸ்டர் படத்தில் கூடுதல் வசனகர்த்தாவாக பணியாற்றினார் ‘மேயாத மான்’, ‘ஆடை’ உள்ளிட்டப் படங்களை இயக்கியுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.49%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.51%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்