கொரோனோவில் இருந்து தப்பிக்க ஆவி பிடிக்கிறேன் – நடிகை பிரியா வாரியர் ஒபன் டாக்

கொரோனோவில் இருந்து தப்பிக்க ஆவி பிடிக்கிறேன் – நடிகை பிரியா வாரியர் ஒபன் டாக்

கொரோனோவில் இருந்து தப்பிக்க நான் தினமும் ஆவி பிடிக்கிறேன் என்று நடிகை பிரியா வாரியர் தெரிவித்துள்ளார்.

 நடிகை பிரியா பிரகாஷ் வாரியர் ஒரு அடார் லவ் படத்தில் கண் அடித்து அந்த கட்சியின் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர். இதனை தொடர்ந்து மலையாளத்தில் சில திரைப்படங்களில் நடித்து வருகிறார்.கொரோனா பரவல்
அதிகரித்து வரும் நிலையில் நடிகர்,நடிகைகள் அதிகமாக பாதுக்கப்பட்டு வருகின்றனர்.இதனால்
அவர்கள் அவர்களையே பாதுகாத்து வருகின்றனர்.

 இந்த நிலையில் சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் பேசும்
போது  " நான் எனது அம்மா, அப்பா, பாட்டி, தம்பி எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறோம். கொரோனா காலத்தில் மிக பத்திரமாக
இருக்கவேண்டும் எங்கள் வீட்டில் 60 வயதை கடந்தவர்கள் இருக்கிறார்கள் என்று
தெறிவித்துள்ளார்.

 மேலும் கொரோனோவில் இருந்து தப்பிக்க நான் தினமும் ஆவி பிடிக்கிறேன். வெந்நீரில் கலந்து மஞ்சள் குடிக்கிறேன். வேறு நகரங்களில் படப்பிடிப்பு நடைபெற்றால், படப்பிடிப்பை முடித்து விட்டு 2 நாட்கள் வீட்டில் யாருடனும் சேராமல் இருப்பேன்.வீட்டில் எங்கு சுற்றினாலும் மாஸ்க் அணிந்தே இருப்பேன். இரண்டு நாட்கள் எந்த அறிகுறியும் இல்லை என்று தெரிந்தால் மட்டுமே என் குடும்பத்தினரோடு இணைவேன்" என்றும் கூறியுள்ளார்

 

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்