இந்தியாவில் 3வது குழந்தை பெறுபவர்களுக்கு சிறை தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் வர வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 3வது குழந்தை பெறுபவர்களுக்கு சிறை தண்டனை போன்ற கடுமையான சட்டங்கள் வர வேண்டும் என நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் மக்கள் தொகை பெருக்கம் பெரிய சிக்கலாக மாறி வருகிறது. இந்நிலையில் உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளில் முதல் இடத்தில் சீனாவும், இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளன.
சீனாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் தொகை உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நடிகை கங்கனா ரனாவத் 'இந்தியாவில் 3வது குழந்தை பெற்றுக் கொண்டால் சிறை தண்டனை அல்லது அபராதம் போன்ற கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது இந்த கருத்தை கிண்டல் செய்யும் விதமாக காமெடி நடிகை சலோனி கவுர் 'கங்கனா குடும்பத்திலும் ஒரு சகோதரர், சகோதரி என மூன்று பேர் மொத்தம் உள்ளனர்' என சுட்டிக்காட்டி பேசினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசியுள்ள கங்கனா ’தாத்தா காலத்தில் பலர் 8 குழந்தைகள் வரை பெற்றுக் கொண்டனர். அப்போது இருந்தது போலவே இப்போதும் வாழ முடியாது மக்கள் தொகையை கட்டுப்படுத்த சீனாவை போல கடுமையான சட்டங்கள் தேவை' என தெரிவித்துள்ளார்.