மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஸ் நடித்து வருகிறார்.
வாழ்க்கையில் பல போராட்டங்களை கடந்து இளம் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஸ். இவரின் கனா, க/பெ.ரணசிங்கம் போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார்.
இவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களும், இவர் தேர்வு செய்யும் படங்களும் என்றுமே பாராட்டப்படுகிறது என்று ரசிகர்கள் சமூக வலைதளத்தில் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மலையாளத்தில் வெளியான தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது காரைக்குடியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இப்படம் குறித்து மனம் திறந்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஸ், க/பெ.ரணசிங்கம் படப்பிடிப்பின் போது சிறு வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்த பெண்ணை கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். இந்த படமும் அதை பற்றி தான் பேசுகிறது என தெரிவித்துள்ளார்.