தனுஷின் அட்ராங்கி ரே திரைப்படத்திற்கு அனிருத் இசையக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
3 படத்தில் அற்புதமான பாடல்களை இசையமைத்து இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இளம் இசையமைப்பாளர் அனிருத். இப்படத்தில் இடம் பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
இதையடுத்து அனிருத் தமிழ் மற்றும் தெலுங்கில் ஏராளமான பாடல்களுக்கு இசையமைத்துவிட்டார். 2013ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான டேவிட் படத்தில் உள்ள ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் ஹிந்தியில் இசையமைத்திருந்தார்.
இந்த நிலையில், தனுஷின் ஹிந்தி திரைப்படமான ராஞ்சனா படத்தை தொடர்ந்து அட்ராங்கி ரே படத்திற்கும் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் முதன் முறையாக முழுநீள ஹிந்தி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.