தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததால் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மருத்துவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகை ரைசா வில்சன்.
தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததால் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு மருத்துவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகை ரைசா வில்சன்.
கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் முதல் சீசன் கலந்து கொண்டவர் நடிகை ரைசா வில்சன். அதனை தொடர்ந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் ஜோடி சேர்ந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இவர் காதலிக்க யாருமில்லை உள்ளிட்ட சில படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
இந்நிலையில் முகத்தை எப்போதும் அழகாக வைத்துக் கொள்வதில் மிகவும் ஆர்வம் கொண்ட ரைசா வில்சன், சமீபத்தில் தோல் மருத்துவர் பைரவி முகப்பொலிவுக்கு செய்த தவறான சிகிச்சையால் தனது முகம் வீங்கி விட்டதாகவும் இதுகுறித்து மருத்துவரை தொடர்பு கொண்டு முயன்றபோது அவர் வெளியூர் சென்று விட்டதாக அலட்சியமாக சொல்லப்பட்டதாகவும் பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் dermal fillers சிகிச்சையை எடுத்துக் கொண்டால் ஒரு வாரத்துக்கு முகம் வீக்கமாக தான் இருக்கும். இதை பயன்படுத்தி ரைசா என்னிடம் பணம் கேட்டு மிரட்டுகிறார் என்று டாக்டர் பைரவி செந்தில் நடிகை ரைசா மீது குற்றச்சாட்டை வைத்தார்.
இந்நிலையில் தற்போது நடிகை ரைசா ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகை மருத்துவர் பைரவிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில் முகப்பொலிவு சிகிச்சையை தவறாக செய்துள்ளதாக கூறி மருத்துவர் பைரவி செந்திலிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளதாக நடிகை ரைசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.27 லட்சம் செலுத்தி சிகிச்சை எடுத்தும் முகப்பொலிவு பெறாமல் ரத்த கசிவு ,வீக்கம் தான் ஏற்பட்டது,உதவி மருத்துவர் அளித்த சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாத நிலையில் பைரவி அளித்த சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
15 நாளில் இழப்பீடு தராவிடில் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் என நடிகை ரைசா வில்சன் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.