குக் வித் கோமாளி மூலம் பிரபலமான சிவாங்கி உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் பாடகியாக அறிமுகமாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் சிவாங்கி. தன் கீச்..கீச்.. குரலால் தொடக்கத்தில் பல அவமானங்களை சந்தித்ததாக கூறிய அவருக்கு அந்த குரலே பல பாராட்டுக்களை குவித்து கொடுத்தது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரும் இவரது அண்ணன் என்று சொல்லப்படும் புகழும் அடிக்கும் லூட்டிகள் தான் இவருக்கு சிவகார்த்திகேயன் படத்தில் வாய்ப்பை பெற்று தந்தது.
இந்த நிலையில் தற்போது அவருக்கு இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் பரவலாக சமூக வலைதளத்தில் பேசப்படு வருகிறது. ஆனால் இது குறித்து சிவாங்கி எந்த ஒரு தகவலும் வெளியிடவில்லை. இருப்பினும் இது குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.