காமெடி நடிகர் படத்தில் இணையும் சன்னி லியோன்…. வெளியான புது தகவல்!

காமெடி நடிகர் படத்தில் இணையும் சன்னி லியோன்…. வெளியான புது தகவல்!

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தமிழில் உருவாகும் ஹாரர் காமெடி படத்தில் நகைச்சுவை நடிகர் சதீஷ்வுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார். இதன் மூலம் தமிழ் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்றார்.

இந்நிலையில், யுவன் இயக்கும் வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி படத்தில் சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தினை வி4யு மீடியா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.வி.சக்தி மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

மேலும் இப்படத்தில்  சதீஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்