படக்குழுவினர் பீதி: கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா!

படக்குழுவினர் பீதி: கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா!

கொரோனா வைரஸின் 2-வது அலை இந்தியா முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் படப்பிடிப்பில் 5 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.இந்த சம்பவம் படக்குழுவினர் இடையே  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.இந்த நிலையில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் சர்காரு வாரி பாட்டா தெலுங்கு படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.நடிகர்-நடிகைகள் வைரஸ் தொற்றிக்கு ஆளாகி வருகிறார்கள்.

மகேஷ்பாபுவும் கீர்த்தி சுரேசும் முதல் முறையாக  இந்த படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் தொடங்கி நடந்து வந்தது.படப்பிடிப்பில் பங்கேற்றவர்களுக்கு படப்பிடிப்பு அரங்கிலேயே கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

அப்போது 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர்  படப்பிடிப்பையும் ரத்து செய்து விட்டனர்.மற்ற நடிகர் மற்றும் நடிகைகளும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.61%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.39%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்