‘லூசிபர்’ ரீமேக்கில் நடிக்கும் நயன்தாரா? வேற லெவல் அப்டேட்..!

‘லூசிபர்’ ரீமேக்கில் நடிக்கும் நயன்தாரா? வேற லெவல் அப்டேட்..!

மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘லூசிபர்’. இப்படத்தில் மோகன்லால் அரசியல்வாதியாகவும், அண்டர்கிரவுண்ட் கேங்ஸ்டராகவும் நடித்து அசத்திருந்தார்.

தற்போது லூசிபர் படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இதில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிக்க பிரபல இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்தை இயக்கவிருக்கிறார். சுமார் 200 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கவுள்ள இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்தப் படத்தில் மலையாளத்தில் மஞ்சு வாரியர் நடித்திருந்த முதலமைச்சர் மகள் கதாபாத்திரத்திற்கு, நயன்தாராவை நடிக்க வைக்க முதலில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கால்ஷீட் பிரச்சினையால் நயன்தாரா மறுத்துவிட்டார். அதன்பிறகு சில நடிகைகளை பரிசீலித்து வந்தனர்.

ஆனால் தற்போது நயன்தாராவையே நடிக்க வைக்க மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படத்தில் நயன்தாரா இணைவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
    56.66%
  • ஓ. பன்னீர்செல்வம்
    43.34%

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்