மேக்கப்பால் பொசுங்கிப் போன ரைசா முகம்: வைரலாகும் போட்டோ

மேக்கப்பால் பொசுங்கிப் போன ரைசா முகம்: வைரலாகும் போட்டோ

தோல் மருத்துவர் செய்த தவறான சிகிச்சையால் தன்னுடைய முகம் வீங்கிவிட்டதாக நடிகை ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தொகுதி வழங்கிய பிக்பாஸ் சீசன் 1ல் பங்கேற்ற நடிகை சைரா அதனை தொடர்ந்து யுவன் ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவான பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். காதலிக்க யாருமில்லை, எப்.ஐ.ஆர் உள்ளிட்ட நான்கிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் சமீபத்தில் தோல் மருத்துவர் செய்த தவறான சிகிச்சையால் தன்னுடைய முகம் வீங்கிவிட்டதாக நடிகை ரைசா வில்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட பதிவில் வீங்கிய முகப் புகைப்படத்தையும் இணைத்து “ நான் நேற்று தோல் மருத்துவர் டாக்டர் பைரவியை சிறிய முக சிகிச்சைக்காக சந்தித்தேன். ஆனால் அவர் எனக்கு தேவையில்லாத சிகிச்சையை வலுக் கட்டாயாமாக அளித்தார். அதனால் தற்போது எனது முகம் இப்படி மாறியிருக்கிறது. 

இதுதொடர்பாக அவரை நான் சந்திக்க முயன்றேன். ஆனால் அவர் என்னை பார்க்க மறுத்துவிட்டார். அவரது உதவியாளர்கள் அவர் சென்னையில் இல்லை என்று கூறுகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்