வேகமெடுக்கும் கொரோனா: நடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

வேகமெடுக்கும் கொரோனா: நடிகர் அதர்வாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது பிரபலங்கள் மத்தியிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.

இந்நிலையில் நடிகர் அதர்வாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அதர்வா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அதர்வா குறிப்பிட்டதாவது, “ கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்டேன். சோதனையில் எனக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. தற்போது நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி வருகிறேன். விரைவில் நான் குணம் பெற்று பணிகளை தொடர்வேன் என்று நம்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதர்வா மறைந்த நடிகர் முரளியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழகத்தின் அடுத்த எதிர்க்கட்சித் தலைவர் யார்?

  • எடப்பாடி பழனிசாமி
  • ஓ. பன்னீர்செல்வம்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்