6 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்..!

உ.பி.,யில் வேகமாக பரவும் கொரோனா: 6 மாவட்டங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்..!

உத்தரபிரதேசத்தின் 6 மாவட்டங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக, உத்தரபிரதேசத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வண்ணம் உள்ளது. கொரோனாவை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதன்படி. லக்னோ, வாரணாசி, கான்பூர், பிரயாக்ராஜ், காசியாபாத் மற்றும் நொய்டா ஆகிய 6 மாவட்டங்களில் இன்று இரவு முதல் ஊரடங்கு அமலுக்கு வருகிறது. 

இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என லக்னோ மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு இன்று (ஏப்.8) முதல் ஏப்ரல் 16 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காசியாபாத் மற்றும் நொய்டாவில் வரும் 17ஆம் தேதி வரையும், மற்ற மாவட்டங்களில் வரும் 30ஆம் தேதி வரையும் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

Pollsகருத்துக் கணிப்பு

Overview

IPL தொடரின் இன்றைய போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • சென்னை சூப்பர் கிங்ஸ்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்