எனக்கு கொரோனாவா? அதிர்ச்சி அடைந்த பிரபல நடிகை!

எனக்கு கொரோனாவா? அதிர்ச்சி அடைந்த பிரபல நடிகை!

தமிழ் திரைப்படங்களில் அங்காடி தெரு படத்தில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை அஞ்சலி, வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தன்னுடைய நடிப்பு திறமையால் ‘அங்காடி தெரு’ படத்தின் மூலம் பிரபலமான அஞ்சலி, எங்கேயும் எப்போதும், மங்காத்தா, கலகலப்பு, சேட்டை, இறைவி,நாடோடிகள் 2, நிசப்தம் என்று தொடர்ந்து வித்தியாசமான கதை கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அஞ்சலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சமூக வலைத்தளம் மற்றும் இணையத்தளங்களில் செய்திகள் வெளியானது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த அஞ்சலி, தனது சமூக வலைத்தள பக்கத்தில்,எனக்கு கொரோனா பாதிப்பு இல்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன் என்றும் இணையத்தளங்களில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக செய்திகள் வெளியானதை அறிந்தேன். அது முற்றியும் பொய்யான செய்தி என்று கூறியுள்ளார்.மேலும் நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் யாரும் அதை நம்ப வேண்டாம்’ என்று பதிவு செய்திருக்கிறார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்