புதுச்சேரி நடுக்கடலில் பேனர் வைத்த தனுஷ் ரசிகர்கள்

அஜித், சிம்புவை தொடர்ந்து தனுஷுக்கும் புதுச்சேரி நடுக்கடலில் பேனர் வைத்த ரசிகர்கள்..!

புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது நடுக்கடலில் பேனர் வைக்க ரசிகர்கள் போட்டியிடும் சூழல் புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. அஜித், சிம்பு ரசிகர்களை தொடர்ந்து தனுஷின் ரசிகர்களும் தற்போது பேனர் வைத்துள்ளனர்.

புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது ரசிகர்கள் பேனர்கள் வைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். அந்த வகையில், நடுக்கடலில் பேனர் வைக்க ரசிகர்கள் போட்டியிடும் சூழல் புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. அஜித், சிம்புவைத் தொடர்ந்து தனுஷின் ரசிகர்களும் தற்போது பேனர் வைத்துள்ளனர்.

நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் நாளை ரிலீஸ் ஆகிறது. அதனை கொண்டாடும் வகையில், புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் கடற்கரை சாலை காந்தி சிலை பின்புறம் கடலில் உள்ள இரும்பு தூண்களில் அவரது படத்தின் பேனரை கட்டியுள்ளனர். படகு மூலம் சென்று அங்கே நீரில் இறங்கி திரைப்படத்தின் பேனரை கட்டியுள்ளதாக தெரிகிறது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்