தனுஷின் கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அதிரடி பதில் !

தனுஷின் கர்ணன் திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா?  தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அதிரடி பதில் !

கொரோனா தொற்று பரவல் காரணமாக தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது.இந்நிலையில்,கொரோனா வைரஸ் காரணமாக வருகிற ஏப்ரல் 10-ந் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் தான் இயங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கர்ணன் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று செய்திகள் வெளியானது.

இதனையொட்டி கர்ணன் தயாரிப்பாளர் தாணு ‘சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிய 'கர்ணன்’ திரைப்படம் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படம் ரசிகர்கள் இடத்தில் பெரும் ஆர்வத்தை கர்ணன் திரைப்படம் ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் லால், யோகிபாபு, லட்சுமி பிரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.கிராமிய பாடகி மாரியம்மாள் பாடிய கண்டா வரச்சொல்லுங்க’ என்ற பாடல், அனைவரையும் கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இதற்கு கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, ‘சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்