குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றிக்கு இவர்கள்தான் காரணம்.. தீயாய் பரவும் தகவல்..!

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பணிபுரிந்தவர்கள் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்கிய சில நாட்களிலேயே இது மற்ற சமையல் நிகழ்ச்சியை போல தான் இருக்கும் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், குக் வித் கோமாளி முதல் சீசனிலேயே நாளுக்கு நாள் மக்களிடம் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றது.
முதல் நிகழ்ச்சியே மக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கொடுக்க இரண்டாவது சீசன் பிரம்மாண்டமாக தொடங்கியது. தற்போது நடைபெற்று வந்த சீசன் 2 நிகழ்ச்சிக்கும் ஆரம்பத்தில் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ரசிகர்களை அதிகம் கவரும் வண்ணம் நிறைய புது புது விஷயங்களை கொண்டு வந்தனர். கோமாளிகள், போட்டியாளர்கள் என அனைவருமே தங்களது பங்கை 100 % கொடுத்து மக்களை எண்டர்டைன் செய்தனர்.
தற்போது இந்நிகழ்ச்சி முடிவுக்கு வந்துவிட்டது. வரும் ஏப்ரல் 14ஆம் தேதியுடன் 2வது சீசன் முடிவடைகிறது. ரசிகர்கள் இதற்குள் முடிந்துவிட்டதா? என சோகத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், கேமரா முன் வந்தவர்களை மட்டும் தான் நமக்கு தெரியும், ஆனால் கேமராவிற்கு பின் இந்நிகழ்ச்சிக்காக பலர் பணிபுரிந்துள்ளனர்.
2வது சீசன் கடைசி நாளில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பணிபுரிந்தவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். அதில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்பதை நீங்களே பாருங்கள். தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
Pollsகருத்துக் கணிப்பு

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
-
ராஜஸ்தான் ராயல்ஸ்
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

அறிவுரை கூற களமிறங்கிய பிக் பாஸ் ஆரி!
