என்ன சொல்லுறீங்க...நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கல்யாணமா?

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். ஹீரோயின் ரோல் மட்டுமின்றி, அம்மா, தங்கை, அக்கா என்று அனைத்து கதாப்பாத்திரகளிலும் தன்னுடைய திறமையால் மக்களை தன் பக்கம் ஈர்த்தவர்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவரையும் ஈர்த்தவர். தொடர்ந்து வடசென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, தர்மதுரை, செக்க சிவந்த வானம், வானம் கொட்டட்டும், கா/பெ ரணசிங்கம் போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து முன்னணி நடிகையாக உலா வருகிறார்.
இதனிடையே, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கண்ணன் இயக்கும், தி கிரேட் இந்தியன் கிச்சன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். அப்படத்தில் இவர் திருமணமான பெண்ணாக நடிக்கிறார். அதில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கும், ராகுல் ரவீந்திரனுக்கும் திருமணமாகும் காட்சி இடம் பிடித்துள்ளது. அந்த புகைப்படம் தான் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.இந்த புகைப்படம் அவருடைய ரசிகர்களிடத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Pollsகருத்துக் கணிப்பு

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
-
ராஜஸ்தான் ராயல்ஸ்
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

அறிவுரை கூற களமிறங்கிய பிக் பாஸ் ஆரி!
