படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பிரசாந்த் - சிம்ரன்..!

படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பிரசாந்த் - சிம்ரன்..!

அந்தகன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் பிரசாந்த் - சிம்ரன் இருவரும் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.

இந்தியில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான அந்தாதுன் படம் 3 தேசிய விருதுகளைப் பெற்றது.

இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரசாந்த், சிம்ரன் நடிக்கின்றனர். மேலும், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், லீனா சாம்சன், செம்மலர், பூவையார் உள்ளிட்டோர் நடித்து வரும் இந்தப் படத்தில் நடிகை ப்ரியா ஆனந்த் தற்போது இணைந்துள்ளார்.

இந்த நிலையில், படத்தின் ஷூட்டிங் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில்  ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடிகர் பிரசாந்துக்கும், 4-ம் தேதி நடிகர் சிம்ரனுக்கும் பிறந்தநாள் வந்ததை அடுத்து படப்பிடிப்பு குழுவினரும் இருவரும் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.

தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்