குக் வித் கோமாளி: இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட சிம்பு

குக் வித் கோமாளி: இறுதிப் போட்டியில் கலந்துகொண்ட சிம்பு.. வெளியான ப்ரோமோ

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் "குக் வித் கோமாளி" நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு கலந்துகொண்ட ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. 

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் "குக் வித் கோமாளி" நிகழ்ச்சி தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிகழ்ச்சி, விஜய் டிவி மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிறது. குக் வித் கோமாளி முதல் சீசனின் டைட்டிலை பிக் பாஸ் வனிதா விஜயகுமாரும், ரன்னராக ரம்யா பாண்டியனும் இடம் பிடித்தனர். 

தற்போது ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2-வது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிகழ்ச்சியில், புகழ், பாலா, சரத், சுனிதா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோர் கோமாளிகளாக பங்கேற்றுள்ளனர். போட்டியாளர்களாக மதுரை முத்து, ஷகிலா, தர்ஷா குப்தா, பாபா பாஸ்கர், கனி, தீபா, அஸ்வின், பவித்ரா ஆகிய 8 பேர் கலந்து கொண்டனர். 

முதலில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர் ஆகிய மூவரும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளனர். பின்னர் நடந்த வைல்ட் கார்டு ரவுண்டில் ஷகிலாவும், பவித்ரா லட்சுமியும் இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்றனர். 

கடந்த வாரம் குக் வித் கோமாளியில் ஃப்ரெண்ட்ஸ் அண்ட் ஃபேமிலி ரவுண்ட் நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டிக்கான படப்பிடிப்பு அண்மையில் நடந்து முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகின. இந்த இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு கலந்து கொண்ட ப்ரோமோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

அதே நேரத்தில், குக் வித் கோமாளி 2-ம் சீசனில் டைட்டில் வின்னராக கனியும், முதல் ரன்னர் அப்பாக ஷகீலாவும், இரண்டாவது ரன்னர் அப்பாக அஸ்வினும் இடம்பிடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்