கமலுக்கு வில்லனாகும் பஹத் பாசில்.. செம்ம அப்டேட்..!

கமலுக்கு வில்லனாகும் பஹத் பாசில்.. செம்ம அப்டேட்..!

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இவர் அடுத்ததாக கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்க உள்ளார். இப்படம் குறித்த அறிவிப்பு கடந்தாண்டு நவம்பர் மாதமே வெளியானது. ஆனால், படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை.

இதனிடையே விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக பஹத் பாசில் நடிக்க உள்ளதாக அண்மையில் தகவல் வெளியானதையடுத்து நடிகர் பஹத் பாசில், சமீபத்திய பேட்டியில் அதனை உறுதி செய்துள்ளார். 

இது குறித்து பேசிய அவர், இப்படத்தில் அரசியல்வாதியாக நடிக்க உள்ளதாகவும், அந்த கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்ததால் உடனே நடிக்க சம்மதம் தெரிவித்ததாகவும் பஹத் பாசில் கூறி உள்ளார்.

விக்ரம் படத்தில் பஹத் பாசில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்