மக்களையும் குக் வித் கோமாளி டீமையும் மிஸ் செய்கிறேன்.. வருந்தும் புகழ்..!

மக்களையும் குக் வித் கோமாளி டீமையும் மிஸ் செய்கிறேன்.. வருந்தும் புகழ்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தமிழ் மக்களின் தற்போதைய எண்டர்டைன்மெண்ட்டாக உள்ளது. இந்த ஒரு நிகழ்ச்சிக்கு மட்டுமே ரசிகர்கள் வட்டம் அதிகமாக உள்ளனர்.

அந்த வகையில் பலரும் எதிர்பார்த்து வந்த பைனல்ஸ் நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 2-வில் விரைவில் வெளியாகவுள்ளது. அதற்கான இறுதி போட்டியாளர்களும் தேர்ந்தெட்டுக்கப்பட்டனர்.

இதற்காக ரசிகர்கள் அனைவரும் மிகுந்த ஆவலோடு காத்துகொண்டு இருக்கின்றனர். மேலும் அஸ்வின், பாபா பாஸ்கர், ஷகீலா, கனி, பவித்ரா உள்ளிட்டோர் பைனல்ஸ்க்கு தேர்வாகியுள்ளனர்.

ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு அன்று 2மணியில் இருந்து 7 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் ஒளிபரப்பாக இருக்கிறது குக் வித் கோமாளி பைனல்.

குக் வித் கோமாளியின் பைனல் படப்பிடிப்பு நடந்து முடிந்து, எடிட்டிங் பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது. 

இந்நிலையில் புகழ் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மக்களையும் குக் வித் கோமாளி டீமையும் மிஸ் செய்கிறேன் என்றும் மிகவும் கஷ்டமாக இருப்பதாகவும் அழுகை வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்