எனது ஜனநாயகக் கடமையை செய்ய முடியாததற்கு இதுதான் காரணம்: வருத்தத்தில் நடிகர் பார்த்திபன்

எனது ஜனநாயகக் கடமையை செய்ய முடியாததற்கு இதுதான் காரணம்: வருத்தத்தில் நடிகர் பார்த்திபன்

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பக்கவிளைவு காரணமாக வாக்களிக்க வர இயலவில்லை என நடிகர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளார்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் நடிகர் பார்த்திபன் வாக்களிக்கவில்லை. தேர்தலுக்கு முந்தைய நாள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ட்வீட் செய்திருந்தார். 

ஆனால், நேற்று அவரே வாக்களிக்கவில்லை. இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், 

''வணக்கமும் நன்றியும்... ஜனநாயகக் கடமையை சீராகச் செய்த சிறப்பானவர்களுக்கு! 

வருத்தமும், இயலாமையும்.... இரண்டாம் தவணை COVID-க்கான தடுப்பூசி எடுத்துக் கொண்ட எனக்கு திடீரென ஏற்பட்ட ஒவ்வாமையில் கண் காது முகம் முழுவதும் தடித்து வீங்கிவிட்டது.டாக்டருக்குக் கூட போட்டோ எடுத்தனுப்பியே மருத்துவம் செய்துக் கொண்டேன்.மாலை வரை சற்றும் குறையவில்லை. 

தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிகச் சிலருக்கு மட்டுமே இது போன்ற எதிர்வினைகள் (reactions). அதுவும் எனக்கு ஏற்கனவே ஒவ்வாமை பிரச்சினைகள் (allergy issues) இருந்ததால் மட்டுமே தூண்டுதல் (trigger) ஆனது.என் வருத்தம் அது நேற்றாகிப் போனதில்'' என்று பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்