ஏழைகளை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்- நடிகர் சோனு சூட்

ஏழைகளை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்- நடிகர் சோனு சூட்

பாலிவுட் நடிகர் சோனுசூட் பெயரைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றிய நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அமலுக்கு வந்த நேரத்தில் வேறு நாடுகளில் சிக்கி தவித்தவர்கள் தாயகம் திரும்ப உதவி செய்தது அதனை தொடர்ந்து விவசாய குடும்பத்திற்கு டிராக்டர், இளம்பெண்ணின் அறுவை சிகிச்சை பண உதவி உள்ளிட்ட பல உதவிகளை செய்ததன் மூலம் நடிகர் பாலிவுட் நடிகர் சோனு சூட் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

சமீபத்தில் இவரது சேவையை பாராட்டி தனியார் விமான நிறுவனமான ஸ்பேஸ் ஜெட், இவரது புகைப்படத்தை விமானத்தில் பதிந்து கெளரவப்படுத்தியது.

இந்நிலையில், சோனு சூட்டின் பெயரைப் பயன்படுத்தி சிலர் மக்களை ஏமாற்றுவதாக புகார் எழுந்தது. அந்த புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் தெலங்கானா போலீஸார் ஒருவரை கைது செய்துள்ள்ளனர். 

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட சோனு சூட் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்,  “ உதவி நாடுபவர்களை ஏமாற்றும் இது போன்ற குற்றவாளிகளை கண்டறிய உதவிய தெலங்கானா காவல்துறைக்கு நன்றி. இது போன்ற தவறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் உடனடியாக அதனை நிறுத்திக்கொள்ளுங்கள். இல்லை என்றால் நீங்கள் விரைவில் ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். ஏழை மக்களை ஏமாற்றுவதை நிறுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
  • ராஜஸ்தான் ராயல்ஸ்

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்