வலிமை அப்டேட் கேட்ட ரசிகருக்கு ஷிவாங்கியின் அசத்தல் பதில்..

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் அஜித் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் வலிமை பட அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சில ரசிகர்கள் பிரதமர் தொடங்கி அனைவரிடமும் அப்டேட் கேட்டு கோரிக்கை வைத்தனர்.
இதற்கு நடிகர் அஜித், சிலர் செய்து வரும் செயல்கள் தன்னை வருத்தமடைய செய்வதாகவும், அறிவித்தபடி படம் குறித்த செய்திகள் உரிய நேரத்தில் வரும். அதுவரை பொறுமை காத்திருங்கள் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கியிடம் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டுள்ளனர். அதற்கு கூலாக பதில் அளித்த ஷிவாங்கி, ’எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க. ஒரு வேலை எனக்கு தெரிந்தால் சொல்கிறேன்’ பதில் அளித்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Pollsகருத்துக் கணிப்பு

ஐபிஎல் திருவிழா: இன்றைய லீக் போட்டியில் வெற்றி பெற போவது யார்?
-
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
-
ராஜஸ்தான் ராயல்ஸ்
Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

அறிவுரை கூற களமிறங்கிய பிக் பாஸ் ஆரி!
