ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு சொந்த வீடா? நம்ப முடியலையே..!

ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு சொந்த வீடா? நம்ப முடியலையே..!

ஆந்திராவில் ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு சொந்த வீடு வழங்கப்படும் என அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நவரத்தினங்கள் எனும் 9 முக்கிய திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக வழங்கியிருந்தார். அதில், ஏழைகளுக்கு வீடு, இலவச மருத்துவம், கல்வி, விவசாயக் கடன், வேலை வாய்ப்பு, பூரண மது விலக்கு உள்ளிட்ட திட்டங்கள் அடங்கும்.

இந்த நிலையில், ஆட்சிப்பொறுப்பேற்ற பின்னர் அவர் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. அந்த வகையில், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.15,000 பணம் செலுத்தப்படுகிறது. பெண்கள் பெயரிலேயே இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்படுகிறது. விண்ணப்பித்த 90 நாட்களுக்குள் பட்டா வழங்க வேண்டும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளதால் ஏழைகள் அனைவரும் இலவச பட்டாக்களை பெற்று வருகின்றனர்.

மேலும், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.10 ஆயிரம், தள்ளு வண்டி மூலம் வாழ்க்கையை நடத்துபவர்களுக்கு ரூ.10 ஆயிரம் என அவரவர் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டு வருகிறது. 

இதன் தொடர்ச்சியாக, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதில், "நகர்புறத்தில் வசிக்கும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு டிட்கோ நிறுவனம் மூலம் அரசு இலவச வீடுகளை கட்டித்தருவது என்றும், அதில் 300 சதுர அடிக்குள் இருக்கும் வீடுகளை ஏழைகளுக்கு ஒரு ரூபாய்க்கு வழங்குவது" எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Pollsகருத்துக் கணிப்பு

Overview

தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால பட்ஜெட்.! பற்றிய உங்கள் கருத்து..!

  • வரவேற்கக்கூடியது
  • தேர்தல்நேர அறிவிப்புகள்
  • கடன்சுமை அதிகரிக்கும்
  • கருத்தில்லை

Related Videosதொடர்புடைய வீடியோ See Allஅனைத்தும் பார்க்க

Find Us Hereஇங்கே தேடவும்